உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலை, மடத்துக்குளத்தில் 45 பேர் வேட்புமனு தாக்கல்

உடுமலை, மடத்துக்குளத்தில் 45 பேர் வேட்புமனு தாக்கல்

உடுமலை : உடுமலை ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 30 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. இரண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்; 26 ஒன்றிய கவுன்சிலர், 38 ஊராட்சி தலைவர் மற்றும் 333 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுமுன்தினம் முதல் நடந்து வருகிறது. இதில், நேற்று ராகல்பாவி ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகோட்டை, ஜிலோப்பன்நாயக்கன்பாளையம், கணக்கம்பாளையம், உடுக்கம்பாளையம், அந்தியூர், ஆண்டிய கவுண்டனூர், தின்னம்பட்டி, போடிபட்டி, பூலாங்கிணர், ஆர்.வேலூர், பெரியவாளவாடி, குரல்குட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 30 வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மடத்துக்குளம் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து நேற்று மாலை வரை மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி வார்டுகளில் உறுப்பினராக போட்டியிட 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி