| ADDED : பிப் 24, 2024 12:16 AM
திருப்பூர்;சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவையில் உள்ள கட்டடங்களில் குடிநீர் குழாய் துண்டிப்பு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் வரி வசூல் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரியினங்கள் நீண்ட காலம் நிலுவையில் உள்ள கட்டடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வகையில், நேற்று ஒரே நாளில், 2வது மண்டலத்தில், 17 இடங்களில் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. ராஜா நகர், லக்கி நகர், காட்டன் மில் ரோடு, பவானிநகர், ரங்கநாதபுரம், லட்சுமி நகர், கே.ஜி., லேஅவுட், ராஜமாதா நகர் மற்றும் கருணாகரபுரி ஆகிய பகுதிகளில் நீண்ட நாளாக வரியினங்கள் நிலுவை வைத்து, நோட்டீஸ் வழங்கியும், வரி செலுத்தாத, 17 இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.வரியினங்கள் நிலுவையில் வைத்துள்ள கட்டடங்களில் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தொடரும். நிர்வாகத்துக்கு ஒத்துழைக்கும் வகையில், வரியினங்களை நிலுவையின்றி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.