உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட கலை இலக்கிய போட்டி: அரசு கல்லூரி மாணவர்கள்  அசத்தல்

மாவட்ட கலை இலக்கிய போட்டி: அரசு கல்லூரி மாணவர்கள்  அசத்தல்

உடுமலை:மாவட்ட அளவிலான இலக்கிய போட்டியில், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, தங்கள் பேச்சு, கவிதை கட்டுரை எழுதும் திறனை வெளிப்படுத்தினர்.திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான இலக்கிய போட்டி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். கவிதை, கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.அதில், கல்லுாரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டியில், உடுமலை அரசு கலை கல்லுாரி மாணவர் மாரிமுத்து இரண்டாமிடம் பிடித்துள்ளார். அதேபோல, கட்டுரை போட்டியில், இக்கல்லுாரி மாணவி கவுதமி இரண்டாமிடம் பிடித்துள்ளார்.தமிழ்வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, முதல் பரிசு, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசு, 7 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு, 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர், மாநில அளவிலான இலக்கிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ