உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விருதுக்கான பள்ளியை தேர்வு செய்ய மாவட்ட குழு அமைப்பு

விருதுக்கான பள்ளியை தேர்வு செய்ய மாவட்ட குழு அமைப்பு

உடுமலை;பன்முக திறனை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிக்கு, அரசின் அன்பழகன் விருது வழங்கப்படுகிறது.கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக திறனை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிக்கு, தமிழக அரசின் அன்பழகன் விருது பள்ளி கல்வித்துறையால் வழங்கப்படுகிறது.விருதுக்கு தகுதியான பள்ளியை தெரிவு செய்ய, விரிவான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதற்கான பள்ளிகளை பரிந்துரைக்க, திருப்பூர் மாவட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என நான்கு வகையாக பள்ளிகள் பிரிக்கப்பட்டு, தனித்தனி மாவட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், ஒவ்வொரு பள்ளிகளின் செயல்பாடுகளை பட்டியலிட்டு, விருதுக்கு தகுதி பெறும் பள்ளிகளை தேர்வு செய்யவும் உள்ளனர். அது தொடர்பாக, அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி