உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்களுக்கு ஒதுக்குவதை தங்களுக்கு ஒதுக்கும் தி.மு.க., :பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பேச்சு

மக்களுக்கு ஒதுக்குவதை தங்களுக்கு ஒதுக்கும் தி.மு.க., :பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பேச்சு

உடுமலை;''மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, தங்கள் வளர்ச்சிக்கு தி.மு.க., வினர் ஒதுக்கி கொள்வதால் தான், தமிழகம் பின்னடைவை சந்தித்து கடன் சுமை அதிகரித்துள்ளது,'' என பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பேசினார்.திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பா.ஜ., ஓ.பி.சி., அணி, மருத்துவம், தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது. பா.ஜ., மாவட்ட மருத்துவ அணி தலைவர் விஜய்கன்னா வரவேற்றார்.கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பேசியதாவது:நமது தேசத்தின் பெருமைகளை, காங்., ஆட்சி சிதைத்த போது, அந்நிலையை மாற்றவே பா.ஜ., போராடியது. இன்று, உலகத்துக்கே, முன்மாதிரி அரசாக பிரதமர் மோடி அரசாங்கம் திகழ்கிறது.காசநோய், போலியோ போன்ற நோய்களுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டு, நீண்ட காலத்துக்கு பிறகே, நம் நாட்டுக்கு அவை அறிமுகப்படுத்தப்பட்டன.ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில், பிற நாடுகளை எதிர்பார்த்து இருக்காமல், நாமே தடுப்பூசி தயாரித்து, பல லட்சம் மக்களின் உயிர்களை பாதுகாத்துள்ளோம்.மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியை, தி.மு.க., வினர் தங்கள் வளர்ச்சிக்கு ஒதுக்கிக்கொள்கின்றனர்.'ஒதுக்குவதில் ஒதுக்குவது', என்ற திராவிட மாடல் ஆட்சியால், தமிழகத்தின் கடன் சுமை பல மடங்கு அதிகரித்து விட்டது.ஆனால், நம் பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை மீது, ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது. தமிழ் மொழியின் சிறப்புகளை சர்வதேச நாடுகளுக்கும் பிரதமர் எடுத்து சென்றுள்ளார்; மதிப்பு மிக்க, 67 சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்டுள்ளார்.தொழிலாளர் வளர்ச்சிக்காக, மத்திய அரசு, புதிதாக விமான நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வரும் போது, தமிழகத்தில், உற்பத்தி செய்த மின்சாரத்தை கொள்முதல் செய்வதிலும், தி.மு.க., வினர் ஊழல் செய்து வருகின்றனர்.அண்டை நாடுகள் மட்டுமல்லாது, சர்வதேச நாடுகள் அனைத்தின் பார்வையும் இந்தியாவின் வளர்ச்சி மீது பதிந்துள்ளது. இதற்கு காரணமான பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பா.ஜ., திருப்பூர் மாவட்ட தலைவர் மங்களம்ரவி, மாநில ஓ.பி.சி., அணி பொதுச்செயலாளர் குட்டியப்பன், நகரத்தலைவர் கண்ணாயிரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை