உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  உயிர் சேதம் ஏற்படுத்தும் நாய்: காலரா தடுப்பூசி செலுத்துவது அவசியம்

 உயிர் சேதம் ஏற்படுத்தும் நாய்: காலரா தடுப்பூசி செலுத்துவது அவசியம்

உடுமலை: 'செல்லப்பிராணிகள், நாய் காலரா எனப்படும், 'கேனைன் பார்வோ வைரஸ்', தாக்குதலால், உயிரிழப்பதை தடுக்க குறித்த நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும்,' என கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் பரவலாக பருவமழை காலத்தில், செல்லப்பிராணிகளை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதில், நாய்க்குட்டிகளுக்கு எளிதில் பரவி, உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நாய் காலரா எனப்படும் 'கேனைன் பார்வோ வைரஸ்', குறித்து அவற்றை வளர்ப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கல்லுாரியின் மருத்துவவியல் துறை உதவி பேராசிரியர் இன்பராஜ் கூறியதாவது: கடந்த 1978ல், முதன்முதலில், 'கேனைன் பார்வோ வைரஸ்' கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நாய்க்குட்டிகளின் இரைப்பை மற்றும் குடல் பகுதியை பாதிக்கிறது. பாலுாட்டு நேரத்தில் இருந்து, 6 மாதம் வரை நாய்க்குட்டிகளுக்கு இவ்வகை வைரஸ் பரவி, உயிர் சேதத்தை ஏற்படுத்துகிறது. நாய்க்குட்டிக்கு வாந்தி, ரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் நீர் வற்றி விடுதல், உடல் மெலிந்து சோர்ந்து காணப்படுவது முக்கிய அறிகுறிகளாகும். இந்த வைரஸ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. பெரும்பாலான இறப்புகள் நோய் அறிகுறிகள் தென்பட்டு, 2-3 நாட்களுக்குள் நிகழ்கிறது. இந்த நோயில் இருந்து நாய்க்குட்டிகளை பாதுகாக்க, 6-16 வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும். 6 முதல் 8 வாரங்கள், 10-12 வாரங்கள் மற்றும் 14 முதல் 16 வாரங்கள் வரை மூன்று முறை செலுத்தப்படுகிறது. பின்னர் 'பூஸ்டர் டோஸ்' ஒரு ஆண்டுக்கு பிறகு செலுத்த வேண்டும். வேகமாக பரவும் தன்மை உடையதால், நோய் அறிகுறிகள் தென்பட்ட உடன் நாய்க்குட்டிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். நாய்க்குட்டி பராமரிக்கப் படும் இடத்தை கிருமிநாசினி யால் துாய்மைப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை