உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தைகளை தொட்டிச் செடியாக வளர்த்து விடாதீர்கள்

குழந்தைகளை தொட்டிச் செடியாக வளர்த்து விடாதீர்கள்

திருப்பூர்:''குழந்தைகளை தொட்டிச்செடியாக வளர்க்க கூடாது; ஆலமரம் போல் உயர்ந்து வளர, வழிகாட்ட வேண்டும்,'' என, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசினார்.ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், 33வது ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவில், பள்ளியின் தலைவர் தியாகராஜன் வரவேற்றார். கீதாராணி, சவிதா குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, ஆண்டறிக்கையை வாசித்தார்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் ராஜாசண்முகம், பள்ளியின் செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர், தாளாளர் பாலசுப்பிரமணியம், ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் மணி, ஊத்துக்குளி ஒன்றிய தலைவர் பிரேமா முன்னிலை வகித்தனர்.தமிழக அரசின், முன் னாள் தலைமை செயலர் இறையன்பு பேசியதாவது:குழந்தைகளை சுதந்திரமாக கல்வி கற்க அனுமதிக்க வேண்டும்; மாறாக, தங்களின் கனவுகளை திணிக்க கூடாது. அவர்களுக்கென்று, ஒரு பாதை இருக்கிறது. இக்கால மாணவர்கள், மிகுந்த நுண்ணறிவு, அறிவாற்றல் மிகுந்தவர்களாக இருக்கின்றனர். தங்களின் எதிர்காலத்தை தீர்க்கமாக சிந்தித்து வைத்திருக்கின்றனர்.குழந்தைகளை தொட்டிச்செடியாக வளர்க்க கூடாது; ஆலமரம் போல் உயர்ந்து வளர, வழிகாட்ட வேண்டும். பாதுகாக்கிறேன் என்று, 'போன்சாய்' மரங்களாக சுருக்கிவிடாதீர்கள்; கானகத்தை பாதுகாக்கும் விருட்சங்களை போல் வளர்க்க வேண்டும். மாணவர்கள், எத்தகைய சவால்கள் எழுந்தாலும், அவற்றை சாதனைகளாக மாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி