உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நமக்கு நாமே மூலம் வடிகால்

நமக்கு நாமே மூலம் வடிகால்

திருப்பூர் மாநகராட்சி, 57 வது வார்டு, ஸ்ரீனிவாசா நகர் மேற்கு பகுதியில் கழிவு நீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இப்பணிக்காக அப்பகுதியினர் 'நமக்கு நாமே' திட்டத்தில், பங்களிப்பு தொகை வழங்கினர். அவ்வகையில் பொதுமக்கள் பங்களிப்பு 5.10 லட்சம் ரூபாய்க்கான காசோலை நேற்று மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் கவிதா மற்றும் அப்பகுதி பிரமுகர்கள் இந்த பங்களிப்பு தொகையை மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோரிடம் வழங்கினர். துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல குழு தலைவர் கோவிந்தசாமி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !