உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நமக்கு நாமே மூலம் வடிகால்

நமக்கு நாமே மூலம் வடிகால்

திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டலம், 33வது வார்டுக்கு உட்பட்ட பகுதி திருமலை நகர். இப்பகுதிக்கு கழிவுநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது. இதை 'நமக்கு நாமே' திட்டத்தில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மொத்தம் 25.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் நிதி சேகரிக்கப்பட்டது.அவ்வகையில் 8.5 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டு, அதற்கான வரைவோலை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி மற்றும் அப்பகுதி பிரமுகர்கள் இதை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை