உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் சுவையும் இல்லை; தரமும் இல்லை

குடிநீர் சுவையும் இல்லை; தரமும் இல்லை

அவிநாசி:அவிநாசி பேரூராட்சிக்கு வினியோகிக்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் சுவை குறைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்; மேலும், சளி, காய்ச்சல், இருமலால் பாதிக்கப்படுவதாகவும் வேதனையுறுகின்றனர்.அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளில், 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம், பவானி ஆற்றின் பகுதியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அவிநாசி - அன்னுார் கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு, அன்னுார், அவிநாசி, சாமளாபுரம், சூலுார், பல்லடம் ஆகிய ஊர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.தண்ணீரை சேமித்து வைத்து வார்டு பகுதிகளில் சப்ளை செய்ய, அவிநாசி சூளை, வ.உ.சி., பூங்கா, காமராஜ் நகர், கைகாட்டிப்புதுார் சந்தைமேடு, ராயம்பாளையம் ஆகிய இடங்களில் மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.கடந்த ஒரு ஆண்டாக தண்ணீரின் சுவை மற்றும் தரம் குறைந்து வருவதாக கவுன்சிலர்களிட மும், பேரூராட்சி நிர்வாகத்திலும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். கடந்த மாதம் தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்வதற்காக தண்ணீர் மாதிரி எடுத்துச் சென்றனர். தற்போது வரை முடிவுகள் குறித்து தெரிவிக்கப்படவில்லைபொதுமக்கள் சிலர் கூறியதாவது:அவிநாசி பேரூராட்சி பகுதியில், உப்புதண்ணீரை குடிப்பது போன்ற உணர்வு உள்ளது. கடந்த நான்கைந்து மாதமாக தண்ணீரின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்றதால், அந்த தண்ணீரை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் என பலரும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொற்று நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்கின்றது. பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தில் தண்ணீரின் தரத்தை பற்றி சுட்டிக்காட்டியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.விரைவில் பகுப்பாய்வுகுடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தண்ணீர் மாதிரியை எடுத்துச் சென்றுள்ளனர். இரு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஒரு நாட்களில் அதன் முடிவுகள் தெரிய வரும். இந்த வாரத்தில் சுகாதார அதிகாரிகள் சிறுமுகை, மூலந்துறை பகுதியில் தண்ணீர் எடுக்கும் இடத்தில் ஆய்வு செய்ய உள்ளனர்.தண்ணீரின் தரம் மற்றும் சுவை குறைய சரியான விகிதத்தில் படிகார கல் மற்றும் குளோரினேசன் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வினியோகிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். கோவையில் உள்ள தமிழக பொது சுகாதாரத் துறையின் கீழ் நீர் பகுப்பாய்வு துறை அதிகாரிகளும் ஆய்வு செய்ய உள்ளனர்.- கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர்,அவிநாசி பேரூராட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி