உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இளம் வயதில் போதைப்பழக்கம் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

இளம் வயதில் போதைப்பழக்கம் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

திருப்பூர்:தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் தனலட்சுமி வரவேற்றார்.கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி பேசியதாவது: இளம் வயதில் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் நிலை அதிகரித்து வருகிறது.இதனால், இளம்வயது குற்றவாளிகள், குற்றச் செயல்கள் அதிகரிக்கிறது. சிறுவயது முதலே ஒழுக்கத்தையும், நல்ல நடத்தையையும் கற்று அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.இது போன்ற குற்றச் செயல்கள், தகாத செயல்களில் ஈடுபடுவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆசிரியர், பெற்றோர் ஆகிய உரிய நபர்களிடம் இது போன்ற நடவடிக்கை குறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும். போதை பழக்கம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மருத்துவ கல்லுாரி பேராசிரியர் சஞ்சய்போஸ், வக்கீல்கள் அருணாசலம், சந்தியா பேசினர். ஆசிரியர் சூரியகலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !