உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மண் கடத்தல் லாரி சிறைப்பிடிப்பு

 மண் கடத்தல் லாரி சிறைப்பிடிப்பு

காங்கயம்: காங்கயம், ஊதியூர், ஆறுதொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட காளிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிலர் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுப்பது தெரிந்தது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மண் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்தனர். வருவாய்துறையினர் மற்றும் ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார் சிறைபிடித்த லாரியை சோதனை செய்தனர். எவ்வித உரிமமும் இல்லாமல், மண் எடுத்தது தெரிந்தது. லாரியில் கொண்டு வந்த மண்ணை மீண்டும் அதே இடத்தில் கொட்ட அறிவுறுத்தினர். மேலும், விவசாய நிலத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் மண் எடுக்கக் கூடாது என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்