உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  முட்டை விலை எதிரொலி ஆம்லெட் விலை உயர்ந்தது 

 முட்டை விலை எதிரொலி ஆம்லெட் விலை உயர்ந்தது 

திருப்பூர்: முட்டை விலை உயர்வால், திருப்பூரில் ஆம்லெட், ஆப்பாயில் உள்ளிட்டவற்றின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளிர்காலம் என்பதால், வழக்கமான அளவை விட உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால், இதுவரை இல்லாத வகையில், மொத்த விலையில் முட்டை ஒன்று, 6 ரூபாய் 70 பைசாவாகவும், சில்லறை விலையில் 7 - 8 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. முட்டை விலை உயர்வால், ஓட்டல், ரோட்டோர உணவக கடை வைத்துள்ளவர்கள் ஆம்லெட், ஆப்பாயில் உள்ளிட்டவற்றின் விலை நிர்ணயிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். 30 முட்டைகளை கொண்ட ஒரு அட்டை முட்டை விலை, 200 ரூபாயாக இருப்பதால், 15 ரூபாய்க்கு ஆம்லெட் விற்க முடியாத நிலை உள்ளது. இதனால், சில கடைகளில், 20 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த முட்டை விற்பனையாளர்கள் கூறுகையில், 'முட்டை ஏற்று மதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இம்மாத துவக்கத்திலேயே வரத்து குறைந்து, முட்டை விலை உயர துவங்கியது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் தயாரிப்பு முட்டை அதிகளவில் விற்பனையாகியதால், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. குளிர் குறைந்தால், வரத்து அதிகரிக்கும். அப்போது, விலை குறையும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை