உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில்முனைவோராகும் துாய்மை பணியாளர்கள்

தொழில்முனைவோராகும் துாய்மை பணியாளர்கள்

திருப்பூர்;நலவாரியம் மூலம் வாங்கிய வாகனத்தை மாநகராட்சிக்கு வாடகைக்கு விட்டு, துாய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோராக மாறியுள்ளனர்.துாய்மைப் பணியாளர் நல வாரியம் சார்பில், துாய்மைப் பணியாளர்கள் பயன் பெறும் விதமாகவும், அவர்களை தொழில் முனைவோராக முன்னேற்றும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியை சேர்ந்த துாய்மைப் பணியாளர்கள் பயன்பெறும் விதமாக, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவு நீர் அகற்றும் வாகனம், பாங்க் ஆப் பரோடா வங்கி கடன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.இந்த வாகனம் திருப்பூர் மாநகராட்சி பகுதியில், கழிவு நீர் அகற்றும் பணிக்கு வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படும். இதன் பயன்பாட்டை நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன், கவுன்சிலர் கவிதா, நவ ஜீவன் அமைப்பு மற்றும் வங்கி அலுவலர்கள், மாநகராட்சி சுகாதார பிரிவினர் கலந்து கொண்டனர்.இதற்கான வாடகையை மாநகராட்சி சார்பில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வாகனத்துக்கான மாத தவணைக்கு மேல் உள்ள தொகை, துாய்மைப் பணியாளர்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும். அவ்வகையில், மாநகராட்சிக்கு குறைந்த வாடகையில் வாகனம் கிடைப்பதோடு, துாய்மைப் பணியாளர்களும் பயன் பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை