உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மூத்த குடிமக்களுக்கு சலுகை மீண்டும் வழங்க எதிர்பார்ப்பு

 மூத்த குடிமக்களுக்கு சலுகை மீண்டும் வழங்க எதிர்பார்ப்பு

உடுமலை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க உடுமலை கிளையின் சார்பில், சிறப்பு கூட்டம் நடந்தது.உடுமலையில் நடந்த கூட்டத்திற்கு, சங்கத்தலைவர் மணி தலைமை வகித்தார். செயலாளர் அழகர்சாமி, பொருளாளர்கள் ஞானபண்டிதன், மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் பெறுவது, ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது, புதிய சங்க நிர்வாகிகள் பொறுபேற்பு உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ