உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காய்கறிகளை சந்தைப்படுத்த தினசரி சந்தை குடிமங்கலம் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு

காய்கறிகளை சந்தைப்படுத்த தினசரி சந்தை குடிமங்கலம் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு

உடுமலை;குடிமங்கலம் வட்டாரத்தில், காய்கறி சாகுபடி பரப்பு அதிகரிக்க, தினசரி சந்தை அமைத்து உதவ வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்தை அடிப்படையாகக்கொண்டு, தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய், சின்னவெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி சாகுபடியில், விவசாயிகள் அதிகளவு ஈடுபடுகின்றனர்.குறிப்பாக, பருவமழை சீசனில், பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்த வட்டாரத்தில் காய்கறிகளை விற்பனை செய்ய போதிய சந்தை வசதி இல்லை.விவசாயிகள், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட சந்தைகளுக்கு, காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.இதனால், போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது; நேரடி கொள்முதல் செய்பவர்களும் உரிய விலை கொடுப்பதில்லை.இப்பிரச்னைக்கு தீர்வாக, பெதப்பம்பட்டி அல்லது குடிமங்கலத்தில் தினசரி சந்தை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: உற்பத்தி செய்யும் காய்கறிகளை, சந்தைப்படுத்த சிரமப்பட்டு வருகிறோம். சுற்றுப்பகுதி சந்தைகளுக்கு, 20 கி.மீ., க்கும் அதிகமாக பயணிக்க வேண்டியுள்ளது.பெதப்பம்பட்டி, பூளவாடியில், வாரச்சந்தை மட்டுமே உள்ளது. எனவே வட்டாரத்தின் மையப்பகுதியில், தினசரி சந்தை அமைத்தால், காய்கறிகளை விற்பனை செய்ய எளிதாக இருக்கும்.மேலும், திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு காய்கறிகளை எடுத்துச்செல்ல, மாநில நெடுஞ்சாலைகளும் அமைந்துள்ளன.இது குறித்து விரிவான ஆய்வு செய்து, சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், சிறு, குறு விவசாயிகளும், காய்கறி சாகுபடியில் ஈடுபட முன்வருவார்கள். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ