உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பண்ணை கழிவு மேலாண்மை பயிற்சி

பண்ணை கழிவு மேலாண்மை பயிற்சி

திருப்பூர் : திருப்பூர், கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன் அறிக்கை:திருப்பூர் மாவட்ட, கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 'நபார்டு' வங்கி நிதியுதவியுடன், 'பண்ணை கழிவு மேலாண்மை உத்திகளின் மூலம் பண்ணையாளர்களின் வருவாயை அதிகரித்தல்' என்ற தலைப்பில், 3 நாள் கட்டணப்பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.பயிற்சியில் கால்நடை மற்றும் கோழிக்கழிவுகள், பண்ணைக் கழிவுகள் பதப்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில், விளக்கங்கள், செய்முறை விளக்கங்கள் அளிக்கப்படும்.பயிற்சியின் கடைசி நாளில், அருகில் உள்ள பண்ணைக்கு, விவசாயிகள் அழைத்துச் செல்லப்படுவர். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, 3 நாட்களுக்கு காலை மற்றும் மாலை சிற்றுண்டி, மதிய உணவு, பயிற்சி சான்றிதழ், குறிப்பு புத்தகம் மற்றும் எழுதுகோல் வழங்கப்படும். 25 பேருக்கு மட்டுமே அனுமதி. 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.முதலில் தொடர்பு கொள்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வரும், 9ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ