உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொரியல் தட்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்; வெயிலின் தாக்கத்தால் மகசூல் பாதிப்பு

பொரியல் தட்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்; வெயிலின் தாக்கத்தால் மகசூல் பாதிப்பு

உடுமலை; உடுமலை பகுதிகளில், பொரியல் தட்டை சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், விலையும் உயர்ந்து வருகிறது.காய்கறி சாகுபடியில், தட்டை பயர், பீன்ஸ் வரிசையில், பொரியல் தட்டையும் ஒன்றாகும். கேரளா மாநிலத்தில், அவியல், பொரியல், கூட்டு என உணவில் அதிகளவு பயன்படுத்தப்படுவதால், அம்மாநிலத்திற்கு அதிகளவு விற்பனைக்கு செல்கிறது.உடுமலை பகுதியில் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், நீர்ப்பற்றாக்குறை, பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களினால், 60 நாட்களில் பயனுக்கு வரும் பொரியல் தட்டை சாகுபடியிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தற்போது அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதிகளில் விளையும் பொரியல் தட்டை, கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு, விற்பனைக்கு செல்கிறது. கேரளா மாநில வியாபாரிகள் வயல்களுக்கு நேரடியாக வந்து, விளையும் பொரியல் தட்டை அனைத்தையும் கொள்முதல் செய்து வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது:பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குளிர் சீதோஷ்ண நிலை காரணமாக, உடுமலை சுற்றுப்பகுதிகளில் நல்ல மகசூல் கிடைத்து வந்தது.விதைப்பு செய்த, 50வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம். தினமும், ஏக்கருக்கு, 100 முதல் 150 கிலோ வரை கிடைக்கிறது. ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது; 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மகசூல் குறைந்து வருகிறது.கடந்த வாரம், கிலோ, ரூ.12 முதல், 15 வரை விற்று வந்த நிலையில், இந்த வாரமாக, ரூ.20 வரை விற்று வருகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் காரணமாக வரத்து குறைந்துள்ளதால், மேலும் விலை உயர வாய்ப்புள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை