உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர்; விவசாயிகள் வேண்டுகோள்

பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர்; விவசாயிகள் வேண்டுகோள்

திருப்பூர்; நொய்யல் ஆற்று தண்ணீரை ஆதாரமாக கொண்ட, சாமளாபுரம் குளத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. அக்குளம் நிரம்பி வழியும் போது, உபரிநீர் பள்ள பாளையம் குளத்துக்கு செல்கிறது; அங்கிருந்து உபரியாக வெளியேறும் தண்ணீர் மீண்டும் நொய்யலை சென்றடைகிறது. பெரியகுளம், சின்னக்குளம் என்று விவசாயிகள் செல்லமாக அழைக்கும் இக்குளங்களில், பள்ள பாளையம் குளத்துக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வறண்டு கிடந்த பள்ள பாளையம் குளத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக, குளத்தில் இருந்து தெற்கே இருக்கும் பகுதிகளுக்கு, குளத்தில் தண்ணீர் தேக்கினால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்நிலையில், நொய்யலில் கடந்த இரண்டு மாதமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், சாமளாபுரம் குளம் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது; பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதால், பாதியுடன் நிற்கிறது. பொதுப்பணித்துறையின், நீர்வளத்துறை அலுவலர்கள் கள ஆய்வு நடத்தி, சாமளாபுரம் குளத்துக்கு வரும் வாய்க்காலை துார்வாரி, குளத்துக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், பள்ளபாளையம் குளத்திலும், முழு அளவில் தண்ணீர் தேக்க வேண்டும். இதனை, மாவட்ட நிர்வாகம், குளங்களில் தண்ணீர் தேக்கப்படுவதை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை