உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொலிவிழந்த பாலம்: களமிறங்கிய விவசாயிகள்

பொலிவிழந்த பாலம்: களமிறங்கிய விவசாயிகள்

உடுமலை;பாலாற்றின் பால தடுப்புச்சுவரை பராமரித்து, வர்ணம் பூசிய விவசாயிகளின் செயல், அனைத்து தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.உடுமலை அருகே தேவனுார்புதுார் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் ஆண்டியூர். கிராமத்தில் இருந்து, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்துக்கு செல்லும் வழியில், பாலாறு குறுக்கிடுகிறது.அப்பகுதியில் முன்பு பாலம் இல்லாததால், விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். நீண்ட இழுபறிக்குப்பின், சில ஆண்டுகளுக்கு முன் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.இந்த பாலத்தின் தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டு, வர்ணம் பூசாமல், பொலிவிழந்து வந்தது. இதையடுத்து, ஆண்டியூர் கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து, நேற்று பாலத்தின் தடுப்பு சுவருக்கு வெள்ளையடித்து, அங்கிருந்த செடிகளை அகற்றி பொலிவுபடுத்தினர்.விவசாயிகளின் இந்த செயல் அனைத்து தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை