உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் சந்தைக்குள் வர மறுத்த விவசாயிகள்!

உழவர் சந்தைக்குள் வர மறுத்த விவசாயிகள்!

திருப்பூர் : உழவர் சந்தையையொட்டி வியாபாரிகள் கடை அமைத்து விற்பதால், தங்கள் விற்பனை பாதிக்கப்படுவதாக கூறி, திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்குள் காய்கறிகளைக் கொண்டு வராமல், சாலையோரம் கடை விரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.திருப்பூர் - பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில், திருப்பூர் தெற்கு உழவர் சந்தை செயல்படுகிறது. சுற்றுப்பகுதி விவசாயிகள், சந்தைக்கு காய்கறிகளை கொண்டுவந்து, நேரடியாக விற்பனை செய்கின்றனர்.உழவர் சந்தை நேரத்தில், சந்தையை ஒட்டி, ரோட்டின் இருபுறமும் வியாபாரிகள் ஏராளமானோர், காய்கறி விற்பனை செய்கின்றனர். இதனால், உழவர் சந்தைக்குள் கடை அமைத்துள்ள விவசாயிகளுக்கு, விற்பனையை பாதிக்கச் செய்கிறது.உழவர் சந்தை நடைபெறும் நேரத்தில், ரோட்டோர வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்வதை தடுக்கவேண்டும் என, விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராடிவருகின்றன.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் தலைமையில், தெற்கு உழவர் சந்தையில், விவசாயிகள், சந்தை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல் சந்தைக்கு காய்கறி கொண்டுவந்த விவசாயிகள், உழவர் சந்தைக்குள் செல்ல மறுத்தனர். தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளை, ரோட்டோரம் தார்ப்பாய் விரித்து, நேற்று அதிகாலை முதல் விற்பனை செய்தனர்.போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், சந்தைக்குள் செல்ல மறுத்த நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், ரோட்டோரத்திலேயே காய்கறி விற்பனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை