உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காதலர் தினத்தன்று மடிந்த ரோஜா க்கள்

காதலர் தினத்தன்று மடிந்த ரோஜா க்கள்

'காதல்' என்ற மூன்றெழுத்து இளசுகளை மட்டுமல்ல... சில நேரங்களில் பெரியவர்களையும் கூட ஈர்த்து விடுகிறது. துள்ளித்திரியும் வயதில் இனம்புரியாத ஈர்ப்பில் காதல் வலையில் வீழ்கின்ற இளசுகள் மத்தியில், காதலுடன் வாழ்க்கை பயணத்தில் பல தடைகளை தகர்த்து அதில், வெற்றி காண்பவர்களும் உள்ளனர்.பல சூழ்ச்சிகள், எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் தோல்வி கண்டு காலமெல்லாமல் நீங்கா நினைவுகளை சுமந்து கொண்டு வாழ்க்கையை வேண்டா, வெறுப்பாக கடத்துபவர்களும் உள்ளனர். இன்னும் சிலர் தங்களின் வாழ்க்கையை முடித்து கொள்பவர்கள் உள்ளனர். காதலிக்கும் போது இருவருக்குமிடையே இருக்கும் நிதானம், விட்டு கொடுத்தல் போன்ற நல்லா குணங்கள் திருமணத்துக்கு பின் மாயமாகி விடுகிறது.

'ஈகோ'வால் முடிந்த வாழ்க்கை

அனுப்பர்பாளையத்தை சேர்ந்த இளம் தம்பதி. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். தம்பதிக்கு, 2.5 வயதில் மகன் உள்ளது. காதலிக்கும் போது இருந்த நிதானம், சகிப்பு தன்மை, திருமணத்துக்கு பின் மாயமானது. அடிக்கடி 'ஈகோ' பிரச்னையில் சண்டை போடுவது, சந்தேகத்தால் பிரச்னை என, ஏதாவது தகராறு தம்பதிக்குள் ஏற்பட்டு வந்தது.காதலர் தினமான, 14ம் தேதி இரவு தம்பதிக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட, அதில், மனைவியை கடுமையாக தாக்கினார். மனைவி மயங்கிய நிலையில், இறந்து விட்டார் என நினைத்து, கணவர் துாக்குமாட்டி இறந்தார். மனைவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி மறுநாள் இறந்தார்.காதலிக்கும் போது விட்டுகொடுத்த குணங்கள், திருமணத்துக்கு பின், இருவரிடமும் இல்லாததான் விளைவு, தற்போது வாழ்க்கையே முடிந்து விட்டது. அவர்களை நம்பி இந்த உலகத்துக்கு வந்த குழந்தையின் எதிர்காலம், அடுத்த ஒவ்வொரு நிமிடங்களும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை