உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் பஸ் ஸ்டாண்டில் அமைக்கணும்!

உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் பஸ் ஸ்டாண்டில் அமைக்கணும்!

பல்லடம் : பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகம், அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்தது.சமீபத்தில், சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆய்வை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அலுவலகம் அகற்றப்பட்டது. உணவுப் பொருட்கள் கலப்படம், காலாவதியான, தடை செய்யப்பட்ட மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருட்கள் உள்ளிட்ட புகார்கள் அடிக்கடி வருகின்றன. பொதுமக்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலரை எளிதில் தொடர்பு கொண்டால் மட்டுமே இது போன்ற புகார்கள் குறித்து உடனடியாக தெரியப்படுத்த முடியும்.பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டு வளாகத்தில் உணவு பாதுகாப்பு அலுவலகம் அமைந்தால் மட்டுமே, வட்டாரம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இது குறித்து ஆலோசித்து, பல்லடம் பஸ் ஸ்டாண்டில் உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி