உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுரை

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுரை

உடுமலை:திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள், சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பேசியதாவது:ஓட்டல், உணவகங்களில், பஜ்ஜி, போண்டா உள்பட தின்பண்டங்களை, ஈக்கள் மொய்க்காதவாறு மூடிவைத்து விற்பனை செய்ய வேண்டும். எண்ணெய் பண்டங்களை செய்தித்தாள்களில் வைத்து, உண்பதற்காகவோ அல்லது பார்சல் செய்து கொடுப்பதை தவிர்க்கவேண்டும். வாழை இலையில் மட்டுமே பார்சல் செய்யவேண்டும்.இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். உணவுப்பொருளின் தரம் சார்ந்த புகார்களை, 94440 42322 என்கிற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது tnfood safety consumer app என்கிற செயலியில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி