உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

திருப்பூர் : திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், 21ம் தேதி நடக்கிறது.திருப்பூர், தாராபுரம் ரோட்டில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷகம், 21ம் தேதி காலை 9:15 மணிக்கு நடக்கிறது. விழா, நேற்று அதிகாலை கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. அதன்பின், அம்மனிடம் உத்தரவு பெறும் நிகழ்ச்சியும், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியனவும் நடந்தது.மாலை முளைப்பாலிகை, தீர்த்தக்குட ஊர்வலமும், முத்துப் பல்லக்கு திருவீதியுலாவும் நடைபெற்றது.இன்று, 19ம் தேதி, காலை நவக்கிரக ேஹாமம், யாக சாலை பிரவேசம், மாலை முதல் கால யாக சாலை பூஜைகளும் நடைபெறுகிறது.நாளை (20ம் தேதி), காலை இரண்டாம் காலம், மற்றும் மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் இரவு, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வும் நடக்கிறது. 21ம் தேதி, அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, புனித தீர்த்த கலச புறப்பாடு, 5:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கும், காலை 9:15 மணிக்கு கோட்டை மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் மூலவருக்கும் மகா கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது.பகல் 12:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை 7:00 மணிக்கு அம்மன் திருவீதியுலா ஆகியன நடைபெறுகிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்