உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகாதார நிலையம் அமைக்க நிதி

சுகாதார நிலையம் அமைக்க நிதி

அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, 10வது வார்டு, அனுப்பர்பாளையம் ஓம் விநாயகா கார்டனில் நகர்ப்புற துணை சுகாதார நிலையம் அமைக்க தேசிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார, 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, துணை சுகாதார நிலையம் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.மாநகராட்சி, மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, கவுன்சிலர் பிரேமலதா, தி.மு.க., வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராம்தாஸ், துணை செயலாளர் மணிமாறன் மற்றும் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ