உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பை விவகாரம்; கைது சரியல்ல த.வெ.க. அருண்ராஜ் பேட்டி

 குப்பை விவகாரம்; கைது சரியல்ல த.வெ.க. அருண்ராஜ் பேட்டி

திருப்பூர்: த.வெ.க. கொள்கைப்பரப்பு பொதுசெயலாளர் அருண்ராஜ், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று, இடுவாய், முதலி பாளையம், பொங்குபாளையம் ஊராட்சிகளில், மாநகராட்சி குப்பையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இடுவாயில், கைதான பொதுமக்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின், அவர் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிராக, இடுவாய், முதலிபாளையம் மக்கள், 30 நாட்களாக போராடி வருகின்றனர். நேரில் பார்த்த போது அதிர்ச்சியாக இருக்கிறது. கல் குவாரிகளில், குப்பையை கொட்டியுள்ளனர். நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடுவாய் மற்றும் முதலிபாளையம் மக்களின் அடிப்படை வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது, அதிர்ச்சியாக இருக்கிறது. பிரச்னையை தீர்க்காமல், போராடும் மக்களை கைது செய்வது சரியல்ல. தனியாருடன் ஒப்பந்தம் செய்து, ஒரு கிலோ குப்பைக்கு, மாநகராட்சி மூலம் நான்கு ரூபாய் பணம் கொடுத்தும், அப்பணிகள் சரிவர நடக்கவே இல்லை. ஊழல் காரணமாக, பொதுமக்கள் மட்டுமல்ல; சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. 'டாலர் சிட்டி' என்று கூறப்படும் திருப்பூர் நகரம் மற்றும் ஒட்டியுள்ள கிராமங்களை, தி.மு.க. அரசு புறக்கணித்துள்ளது. கட்சி தலைமையுடன் ஆலோசித்து, இப்பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், இரண்டு கட்சிகளும் தேவையில்லாமல் அரசியல் செய்கின்றனர்; மக்களும் அதை கண்டுபிடித்துவிட்டனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை