உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வன எல்லையில் பிளாஸ்டிக் கழிவுகள்; கண்டுகொள்ளாத அரசு துறை அதிகாரிகள்

 வன எல்லையில் பிளாஸ்டிக் கழிவுகள்; கண்டுகொள்ளாத அரசு துறை அதிகாரிகள்

உடுமலை: உடுமலையில், வன எல்லையில் பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த மது பாட்டில்கள் என சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள, உடுமலை, அமராவதி வனச்சரக எல்லையாக, மூன்று ரோடு சந்திக்கும் ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதி உள்ளது. இப்பகுதி, கேரளா - தமிழக எல்லையாகவும், உடுமலை- மூணாறு வழித்தடமாகவும் உள்ளது. இதனால், இந்த ரோட்டில் ஏராளமான சுற்றுலா பயணியர், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதிளில், உள்ள கடைகளிலிருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகளும், இங்கு அமைந்துள்ள மதுக்கடையிலிருந்து, மது வாங்கும் போதை ஆசாமிகள் மது பாட்டில்களை ரோட்டின் இரு புறமும் அமர்ந்து குடிப்பதோடு, மது பாட்டில்களை உடைத்தும், பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர், குளிர்பான பாட்டில்களையும் வீசிச்செல்கின்றனர். வனத்திற்கு செல்லும் ரோட்டின் இரு புறமும், இவ்வாறு, உடைந்த மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு காணப்படுவதால், வனத்தின் சூழல் பாதிப்பதோடு, சுகாதார கேடு ஏற்படுகிறது. இப்பகுதிகளில், ஏராளமான வன விலங்குகள் உள்ளதோடு, மலைகளில் பெய்யும் மழை நீர் ஓடையாக வரும், நீர் வழித்தடத்தில், கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மழை பெய்தால், ஓடையில் அடித்து செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள், நேரடியாக வன விலங்குகளின் குடிநீருக்கான நீர் நிலைகளில் தேங்கி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, வனப்பகுதியை ஒட்டியுள்ள கடைகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், உடைந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை