உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூலனுார் அருகே பசுமைமயமாகிறது

மூலனுார் அருகே பசுமைமயமாகிறது

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மூலனுார் அருகே, 650 மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று முன்தின நிலவரப்படி, 2.40 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மூலனுார் அடுத்த தில்லைக்கவுண்டன்புதுாரில் மரக்கன்றுகள் நேற்று முன்தினம் நடப்பட்டது. காளிமுத்து என்பவரின் தோட்டத்தில், செம்மரம் -350, ஈட்டி -300 என, 650 மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களை அணுகலாம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை