உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொலை வழக்கு 5 பேர் மீது குண்டாஸ்

கொலை வழக்கு 5 பேர் மீது குண்டாஸ்

திருப்பூர்:திருப்பூர் திரு.வி.க., நகரை சேர்ந்தவர் பாலமுருகன், 40; பனியன் தொழிலாளி. கடந்த ஜன., 3ம் தேதி நாவிதன் தோட்டம் முதல் வீதியில் நடந்து சென்றார். இரண்டு டூவீலரில் வந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொன்றனர். கொலை தொடர்பாக, திருப்பூர் தெற்கு போலீசார் சடலத்தை மீட்டு, நான்கு தனிப்படை அமைத்து விசாரித்தனர்.கடந்த, 2022 ஜூலை 12ம் தேதி, பாலமுருகனும், அவரது தம்பி முத்துவேலும் சேர்ந்து, பெரியப்பா மகன் ஆறுமுகத்தை வெட்டி கொன்றனர். இதுதொடர்பாக, பழி வாங்க காத்திருந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் தற்போது பாலமுருகனை வெட்டி கொன்றது தெரிந்தது. கொலை தொடர்பாக, சென்னையை சேர்ந்த நொண்டி முருகன், 56, அவரது மகன் மணிகண்டன், 23, திருப்பூரை சேர்ந்த சரவணன், 26, கதிர்வேல், 21, ஹரிஹரன், 25 ஆகியோரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டு வருவதால், ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். ஐந்து பேரும் குண்டாசில் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ