உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நல்லது செய்தால் புண்ணியம்; பாவம் செய்தால் தண்டனை

 நல்லது செய்தால் புண்ணியம்; பாவம் செய்தால் தண்டனை

அவிநாசி: அவிநாசியிலுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில், மார்கழி உற்சவத்தை முன்னிட்டு, கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:

நாம் இன்றைய நாளில் நன்றாக வாழ்கிறோம் என்றால் அதற்கு முந்தைய நாட்களில் யாருக்காவது தானம், தர்மம், உதவி ஏதாவது ஒன்று செய்திருக்க வேண்டும். அனைவரையும் அனுசரித்து நம்மால் முடிந்த உதவிகளையும், அன்பையும் விதைக்க வேண்டும். நமக்காக எல்லாவற்றை யும் எல்லா வகையிலும் இறைவன் படைத்துள்ளான். ஆனால் எதையெதை எந்தெந்த காலத்தில் எந்தெந்த அளவில் அனுபவிக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. பிணி, பசி, மூப்பு என அனைத்தும் கொண்டதுதான் நம் வாழ்க்கை. நம் பாவங்களை வாழும் போதே நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்பதை இறைவன் நிர்ணயித்துள்ளார். பக்திக்கும், வேதத்திற்கும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பாகுபாடு இல்லை. நமக்கு என்ன தேவையோ அதை நம்மால் என்ன அளவில் வேண்டுமோ அதை மட்டும் பெற வேண்டும். நல்லது செய்தால் புண்ணியம், பாவம் செய்தால் தண்டனை என நாம் அனுபவிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை