உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கொசு உற்பத்தி அதிகரிப்பு

 கொசு உற்பத்தி அதிகரிப்பு

உடுமலை: உடுமலை, குடிமங்கலம் சுற்றுப்பகுதிகளில், பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மழையால், கிராம குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது. விளைநிலங்கள், ரோட்டோரங்களில், பசுமை திரும்பியுள்ள நிலையில், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளில், தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், நன்னீர் மற்றும் கழிவு நீரில், உற்பத்தியாகும் கொசுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பருவமழை சீசனில், காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது; கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், மக்களுக்கு நோய் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை