உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்னிசை பாட்டரங்கம்

இன்னிசை பாட்டரங்கம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா, காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த, 25ம் தேதி துவங்கிய இக்கண்காட்சியில், 150க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன.புத்தக திருவிழா முன்னிட்டு தினமும் மாலை, 6:00 மணிக்கு பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சியும் தொடர்ந்து கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், நேற்று முன்தினம், பேராசிரியர் மாரிமுத்து தலைமையில், இன்னிசை பாட்டரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மக்கள் மனம் கவர்ந்த பாடலாசிரியர்கள் என்ற தலைப்பில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து சுரேஷ்குமார்; கண்ணதாசன் குறித்து தணிகைவேலன்; வாலி குறித்து சித்ரா கிருஷ்ணன் வைரமுத்து குறித்து பிரபு ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி