உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடம் நகராட்சி தரம் உயர்கிறதா?

பல்லடம் நகராட்சி தரம் உயர்கிறதா?

பல்லடம்;பல்லடம் நகராட்சி, கடந்த காலத்தில் பேரூராட்சியாக இருந்தது. கடந்த, 2004ல், மூன்றாம் நிலை நகராட்சியாகவும், இதையடுத்து, 2010ல் முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.ஆண்டு வருமானம், 10 கோடிக்கு மேல் இருந்தால், சிறப்பு நிலை நகராட்சியாக கருதப்படுகிறது. பல்லடம் நகராட்சியின் ஆண்டு வருமானம், 10 கோடி ரூபாய் வரை உள்ளது.தொழில், வியாபாரம், மக்கள் தொகை ரீதியாக உயர்ந்து வரும் பல்லடம் நகராட்சியை, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கு ஏற்ப, சமீப நாட்களாக, பல்லடம் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது என, நகராட்சி கவுன்சிலர்கள் தெரிவித்து வருகின்றனர்.மேலும், ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆறுமுத்தாம்பாளையம், மாணிக்காபுரம் மற்றும் வடுகபாளையம் புதுார் ஊராட்சிகளுக்கு உட்பட்ட சில வார்டு பகுதிகளை பிரித்து நகராட்சியுடன் இணைத்து, 18 வார்டுகளாக உள்ள நகராட்சியை, 40 வார்டுகளாக அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இவ்வாறு, சிறப்பு நிலை நகராட்சியாக பல்லடம் தரம் உயர்த்தப்படுவதால், அரசிடமிருந்து கூடுதல் நிதி உதவி, வரி மற்றும் இதர வருவாய் வாயிலாக, கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், அரசு சலுகைகளும் அதிகரிக்கும்.இது குறித்து, கமிஷனர் முத்துசாமியிடம் கேட்டதற்கு, 'நகராட்சியை தரம் உயர்த்துவது குறித்த எந்த தகவலும் வரவில்லை,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை