உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெய் ஸ்ரீராம் அகாடமி பள்ளி ஆண்டு விழா

ஜெய் ஸ்ரீராம் அகாடமி பள்ளி ஆண்டு விழா

திருப்பூர் : அவிநாசிபாளையம், ஜெய்ஸ்ரீ ராம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது.விழாவுக்கு பள்ளி தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீனசுல்தானா மாணவ, மாணவியருக்கு ஊக்கமூட்டும் வகையில் பேசினார். பள்ளியின் துணைத்தலைவர் முத்துஅருண் சிறப்புரை ஆற்றினார்.பள்ளி முதல்வர்கள் கலைச்செல்வி, யமுனாதேவி ஆண்டறிக்கை வாசித்தனர். தலைமை அலுவலர் சரவணன் ஒருங்கிணைத்தார். மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பெற்றோர், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி