உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தடம் பதித்த கிட்ஸ் கிளப்

தடம் பதித்த கிட்ஸ் கிளப்

திருப்பூர்:மாவட்ட தடகளப் போட்டியில் தடம் பதித்தது, திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளி.திருப்பூர், ஜெயந்தி பள்ளியில், 2024ம் ஆண்டுக்கான தடகளப் போட்டி நடத்தப்பட்டது.இதில், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 6ம் வகுப்பு மாணவன் விஷ்ணு, 100 மீ., ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டெறிதல் போட்டிகளில் முதலிடம் பிடித்து, தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.இதுதவிர, 12 வயதுக்குட்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர் பிரிவில், 400 மீ., ஓட்டத்தில் முதலிடம்; 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மாணவியர் குழு முதலிடம் பெற்றனர். 10 வயதுக்குட்பட்டோர் குழு பிரிவில், மாணவர் அணி முதலிடம்; மாணவியர் அணி, இரண்டாமிடம் பெற்றனர். சிறந்தஅணிக்கான விருதும் இப்பள்ளி மாணவர்கள் தட்டிச் சென்றனர்.அனைத்து பிரிவிலும் அதிக புள்ளிகளை பெற்று, சாம்பியன் பட்டத்தை கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளி மாணவ, மாணவியர் தக்க வைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை கிட்ஸ் கிளப் கல்விக்குழுமங்களின் சேர்மன் மோகன் கார்த்திக், பள்ளி தாளாளர் வினோதினி, பள்ளி முதல்வர் நிவேதிகா, இயக்குனர் ஐஸ்வர்யா, ஆசிரியர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை