உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ மதுரை வீரன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

ஸ்ரீ மதுரை வீரன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

உடுமலை;சின்னவாளவாடி ஸ்ரீ மதுரை வீரன் கோவில் கும்பாபிேஷகம் நாளை, (11ம் தேதி) நடக்கிறது.உடுமலை சின்னவாளவாடியில், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பொம்மியம்மாள், ஸ்ரீ வெள்ளையம்மாள், தன்னாட்சியப்பன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ முனியப்பசாமி கோவில் உள்ளது.கோவிலில், மூலவர் கோபுரம், முன்மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை, 7:30 மணிக்கு, விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிேஷக விழா துவங்குகிறது.தொடர்ந்து மகா கணபதி ேஹாமம், மாலை, 4:30 மணிக்கு, முதற்கால யாக சாலை பூஜை, இரவு, 8:00 மணிக்கு சுவாமி சிலைகளுக்கு யந்திரம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை, (11ம் தேதி) காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை துவங்குகிறது. காலை, 8:15 மணிக்கு மேல், 9:15 மணிக்குள் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. பின்னர், சிறப்பு அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ