உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

திருப்பூர்,:திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், குமரன் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முன்னதாக கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார். மூத்த வக்கீல் அருணாசலம், இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடு; பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினார். பெண்களுக்கான சொத்து உரிமை குறித்து வக்கீல் ஸ்ரீராம், பெண்கள் பாதுகாப்பு, போக்சோ சட்டம் குறித்து வக்கீல் பூங்கொடி ஆகியோர் பேசினர்.பேராசிரியர் ரக்ஷிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சவீதா, ராதாமணி, அலமேலு மங்கை சுதா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை