உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதை பழக்கத்துக்கு எதிராக அணி திரள்வோம்!

போதை பழக்கத்துக்கு எதிராக அணி திரள்வோம்!

திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீசார், மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது.திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமை வகித்தார்.கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார். சமூக நீதி, மனித உரிமை பிரிவு பொறுப்பாளர் ராஜேஷ்பிரபு முன்னிலை வகித்தார். மாணவியர் 'போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை மீட்க ஒருங்கிணைவோம்' எனும் தலைப்பில், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.தொடர்ந்து, ஊர்க்காவல் படை குழுவினரின் மவுன மொழி நாடகம், போதை விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி கல்லுாரியில் நடத்தப்பட்டது.மாலை தீரன் சின்னமலை கல்லுாரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகர போலீசாரால் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை