| ADDED : ஜூலை 07, 2024 11:20 PM
''உங்களை (மாணவர்கள்) ஜெயிக்க வைக்க நினைக்கும் கல்லுாரிகளில் இணையுங்கள்'' என்று கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறினார்.கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது:ஒவ்வொரு நிலையிலும் நாம் முன்னேறி, வெற்றி பெற வேண்டும் என்பது பெற்றோரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு, விருப்பமாக உள்ளது. அதனை நிறைவேற்ற நாம் படிக்க வேண்டும். சரியான கல்லுாரியை தேர்வு செய்து, சரிவரப் பாடங்களை கவனித்து படிப்பவர்கள், சிறந்த வேலையைப் பெறுகின்றனர்.'பிக்னிக் ஸ்பாட்' அல்ல கல்லுாரிஉழைத்தால் தான் பலன் கிடைக்கும். 'என்ஜாய்' செய்வதற்கு கல்லுாரி 'பிக்னிக் ஸ்பாட்' இல்லை. வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இப்போது இருக்கிறீர்கள். கல்லுாரி தேர்வும், படிப்பும் சரியாக இருந்தால் தான், வாழ்வில் ஜெயிக்க முடியும். வேலைவாய்ப்பு தர தயாராக இருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் உங்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை தேடுகின்றன. இதுவரை, கடந்ததெல்லாம் பள்ளி படிப்பு; சரிசெய்து கொள்ளலாம். இனி அப்படி கடந்து போக முடியாது. நாம் சோம்ேபறியாக இருந்தால், நம்மை தேடி வெற்றி வராது.படிப்புதான் முக்கியம்செயல்களில் வேகமும், புத்திகூர்மையும் முக்கியம். வாழ்வில் நீங்கள் வெற்றி பெற படிப்பு தான் முக்கியம். பெற்றோர் படிப்பிலும், ஒழுக்கத்தில் செல்லம் கொடுக்கவே கூடாது. கண்டிக்க வேண்டிய நேரத்தில், கண்டிக்க வேண்டிய இடத்தில் கட்டாயம் கண்டிக்க வேண்டும்.கல்லுாரிகளுக்கு நேரில் சென்று பாருங்கள். பிளேஸ்மென்ட் எப்படி, கடந்த ஆண்டுகளில் எத்தனை பேர் படித்து, தேர்ச்சி பெற்றுள்ளனர்; வேலைவாய்ப்பில் உள்ளார்களா என்பதையெல்லாம் பாருங்கள்.உங்களை ஜெயிக்க வைக்க நினைக்கும் கல்லுாரிகளில் இணையுங்கள். நம்மை நாம்தான் தயார்படுத்த வேண்டும். படிக்க வைக்கும் பெற்றோர் கடவுளுக்குச் சமம். அவர்கள் கூறும் அறிவுரைகளை மாணவர்கள் பொறுமையுடன் கேளுங்கள். முன்னேற்றத்துக்கு பாடுபவர்களை சங்கடப்படுத்தக்கூடாது.இவ்வாறு, அஸ்வின் பேசினார்.