பஞ்சபூத வழிபாடாக அமைந்த பொங்கல் விழாமண் பானையில் பொங்கலிடப்படுகிறது. பானை செய்யப் பயன்படும் களிமண், நிலத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. பானையில் நீர் விட்டு, அடுப்பை மூட்டுகிறோம். நெருப்பு எரிவதற்குக் காரணமாக காற்று அமைகிறது. திறந்தவெளியில் பொங்கல் வைப்பதன் மூலம் ஆகாயத்தைப் பார்க்கிறோம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே பஞ்சபூதங்கள்; பஞ்சபூத வழிபாடாக பொங்கல் அமைகிறது. பஞ்சபூதங்களைக் காக்கத் தவறியதன் விளைவுதான், இன்று காலநிலைச் சூழல்களின் மாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது.இருள்மயம்திருப்பூர், நெருப்பெரிச்சல் மண்டல அலுவலகம், வரிவசூல் மையம் அருகில் தெருவிளக்கு எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எரியாத விளக்கை மாற்ற வேண்டும்.- ராமமூர்த்தி, நெருப்பெரிச்சல். (படம் உண்டு) ராட்டினம் சேதம்திருப்பூர் வடக்கு உழவர் சந்தை பின்புறமுள்ள மாநகராட்சி பூங்காவில் சிறுவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள துாரி, ராட்டினங்கள் உடைந்து சேதமாகி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.- உமாசங்கர், எஸ்.வி., காலனி. (படம் உண்டு)தெருநாய்த் தொல்லைதிருப்பூர், பெரிச்சிபாளையம், தெற்கு விரிவு சாலையில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.- ராஜ்குமார், பெரிச்சிபாளையம். (படம் உண்டு)நடுரோட்டில் குழிதிருப்பூர், கருப்பகவுண்டம்பாளையம் - கல்லாங்காடு ரோட்டில் உள்ள குழியை மூட வேண்டும். நடுரோட்டில் உள்ள குழியால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- குமரன், கருப்பகவுண்டம்பாளையம். (படம் உண்டு)திருப்பூர் அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையத்தில் இருந்து பங்களா ஸ்டாப் வரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- ஜெகன், பங்களா ஸ்டாப். (படம் உண்டு)உடைந்த கேட்வால்வுதிருப்பூர், மிலிட்டரி காலனி நான்காவது வீதியில் தண்ணீர் குழாய் கேட்வால்வு உடைந்துள்ளது. பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.- திருப்பதி, ராயபுரம். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், ராயாபுரம், ஜெய்வாபாய் ஸ்கூல் வீதி சந்திப்பில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது. சாலையே குழியாகி விட்டது.- லட்சுமி நாராயணன், ராயபுரம். (படம் உண்டு)கால்வாய் அடைப்புதிருப்பூர், 18வது வார்டு, பாப்பநாயக்கன்பாளையம் மெயின் ரோட்டில், கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது.- மோகன்குமார், பாப்பநாயக்கன்பாளையம். (படம் உண்டு)திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர், பட்டத்தரசியம்மன் கோவில் பின்புற வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது.- பாலு, எம்.எஸ்., நகர் (படம் உண்டு)இதுவா இடம்?சேவூர், ரெயின்போ சிட்டியில் நீர்வழிப்பாதையில் குப்பை கொட்டி வருகின்றனர். மழை பெய்தால், நீர் வழிந்தோட வழியில்லாத அவலநிலை ஏற்படும்.- நஞ்சுண்டமூர்த்தி, சேவூர். (படம் உண்டு)அருகில் ஆபத்துதிருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்பில் மின் கம்பி ஆபத்தாக தொங்கிய நிலையில் உள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் சரிசெய்ய வேண்டும்.- குமார், பெருமாநல்லுார். (படம் உண்டு)வளைந்த கம்பம்திருப்பூர் அவிநாசி ரோடு, தண்ணீர் பந்தல், சிட்டி கிளப் எதிரில், எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மின்கம்பம் வளைந்த நிலையில் உள்ளது.- மகேஷ்குமார், தண்ணீர் பந்தல். (படம் உண்டு),கால்வாயில் சாயக்கழிவுதிருப்பூர், குமார் நகர், வளையங்காடு ரோட்டில் இரவு நேரங்களில் மறைமுகமாக துணிகள் சாயமிடப்பட்டு, கழிவுகள் அப்படியே கால்வாயில் திறந்து விடப்படுகிறது.- கார்த்திகேயன், வளையங்காடு. (படம் உண்டு)தாழ்வான மின்கம்பிஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, கருக்கங்காட்டு புதுாரில் மின்கம்பிகள் வீட்டின் அருகே தாழ்வாக பயணிக்கிறது. அடிக்கடி தீப்பொறி பறக்கிறது.- சரவணன், கருக்கங்காட்டுப்புதுார். (படம் உண்டு)