உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுச்சூழலை நேசி... சுருங்காது சுவாசம் யோசி!

சுற்றுச்சூழலை நேசி... சுருங்காது சுவாசம் யோசி!

அவிநாசி : 'நாம் பூமியின் வாடகைவாசி தான்; இதை அழிக்கவோ சுரண்டவோ உரிமை இல்லை' என்பதை மாணவப்பருவத்தில் உணர்ந்துகொண்டால், சுற்றுச்சூழல் சிறக்கும். ''சுற்றுச்சூழல் குறித்த பாடத்திட்டம், கல்லுாரியில், ஒவ்வொரு பருவத்திலும் அவசியம்'' என்று 'யுனிசெப்' அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர்.அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் மற்றும் பி.ஏ.கே., பழனிசாமி தில்லை சிவகாமி அறக்கட்டளையுடன் இணைந்து, 'எதிர்காலத்தை மேம்படுத்துதல்; பருவநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான இளையோர் தலைமையிலான தீர்வுகள்' என்ற தலைப்பில், திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் நளதம், தலைமை வகித்து, பயிலரங்கை துவக்கி வைத்தார். சமூக கொள்கை மற்றும் குழந்தை உயிர் வாழ்வு நிபுணர் கவுசிக் கங்குலி, பேசினார். 'யுனிசெப்' தமிழகம் மற்றும் கேரள அலுவலக ஆலோசகர் சுபா, குழந்தை மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு ஆலோசகர் டாக்டர் பூஜா சங்வி ஆகியோர், காலநிலை மாற்றம், அதனால் ஏற்படும் பாதிப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.கல்லுாரியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 125 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. என்.எஸ்.எஸ்., மாணவர் சக்தி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். பயிலரங்க ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் டாக்டர் தாரணி, அறக்கட்டளை ஆலோசகர் லில்லி மார்க்கரெட் ஆகியோர் செய்திருந்தனர்.பயிலரங்கில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கள்;n சுற்றுச்சூழல் குறித்த சரியான புரிதல், அதுசார்ந்த விஷயங்களை பாட திட்டத்தில் இணைத்து, ஒவ்வொரு பருவத்திலும், மாணவ, மாணவியர் 'பிராஜக்ட்' செய்யும் வகையிலான கல்வி முறையை புகுத்த வேண்டும்.n தேவைக்கு அதிகமாக மின்சாதன பொருட்கள் குறிப்பாக, மொபைல் போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். மின் சேமிப்பு மற்றும் நீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும்.n தொழில் முனைவோராக மாறவுள்ள மாணவர்கள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வேதிப் பொருட்களை நதி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கலக்காத வகையில், மாற்று ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும்.n கல்லுாரி வளாகத்தை, பாலிதீன் இல்லாத இடமாக மாற்ற வேண்டும். பெண்களின் உணவு மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.n ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத உடல் மற்றும் மன வலிமை கொண்ட புதிய இளைய சமுதாயம் உருவாக்குவதில், கல்லுாரி மாணவ, மாணவியர் அதிகம் பங்களிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை