உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செய்தன ராம்... மாகாளியம்மன் கோவில் பளிச்

செய்தன ராம்... மாகாளியம்மன் கோவில் பளிச்

பல்லடம்;பல்லடம் அருகே துாய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, பா.ஜ.,வினர் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் அருகே, துாய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி நடந்த பணியை பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.மாவட்ட துணை தலைவர் வினோத் வெங்கடேஷ், நகர தலைவர் வடிவேல் மற்றும் பா.ஜ., நகராட்சி கவுன்சிலர்கள் சசிரேகா, ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, மாகாளியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கிடந்த குப்பைகள் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. கோவிலை சுற்றி இருந்த முட்செடிகள், செடி கொடிகள் அகற்றப்பட்டன. பா.ஜ., நிர்வாகிகள் ரமேஷ்குமார், பன்னீர்செல்வம் உட்பட தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ