உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்காச்சோளம் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி வரும் பருவத்தில் சாகுபடி அதிகரிக்கும்

மக்காச்சோளம் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி வரும் பருவத்தில் சாகுபடி அதிகரிக்கும்

உடுமலை:உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விலையும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை பகுதிகளில், பி.ஏ.பி., பாசனம், அமராவதி பாசனம், இறவை மற்றும் மானாவாரி பாசன நிலங்களில், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யபட்டு வந்தது.கடந்தாண்டு, பருவமழைகள் ஏமாற்றியதால், சாகுபடி பரப்பு, பாதியாக குறைந்தது. இப்பகுதிகளில் நடவு செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது அறுவடை செய்யப்படுகிறது. கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி தற்போது எத்தனால் உற்பத்தி ஆலைகளுக்கும் மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்துள்ளது.இதனால், கடந்த மாதம் அறுவடை துவங்கியது முதல், விலை சீராக உள்ளதோடு, படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேலும், கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு மகசூலும் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடந்தாண்டு, நடப்பு சீசனில், ஒரு குவிண்டால், 2,320 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 2,450 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வரும் காலங்களில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.விவசாயிகள் கூறியதாவது:உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 120 நாட்களில், அறுவடை முடிந்து வருவாய் கிடைப்பதால், விவசாயிகள் ஆர்வம் காட்டினர். கடந்தாண்டு, பருவமழைகள் குறைந்ததால், மக்காச்சோளம் சாகுபடி பரப்பு குறைந்தது.தற்போது விலை உயர்ந்து வருவதால், வரும் பருவங்களில் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.குறைந்த விலையில், அதிக மகசூல் தரும் தரமான விதைகள், படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டால், சாகுபடி பரப்பும், உற்பத்தியும் அதிகரிக்கும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்