உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பள்ளி பஸ்சில் டீசல் திருடிய நபர் கைது

 பள்ளி பஸ்சில் டீசல் திருடிய நபர் கைது

பொங்கலுார்: கோவையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 65; கோவையில் உள்ள தனியார் கல்லுாரியின் பஸ் டிரைவர். பல்லடம் அடுத்த கேத்தனுாரில் பஸ்சை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மர்ம நபர்கள் பஸ்ஸில், 80 லிட்டர் டீசலை திருடி விட்டனர். இதுகுறித்து அவர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் அங்கு ஈச்சர் வேன் ஒன்று நீண்ட நேரம்நின்று சென்றது தெரிய வந்தது. வேன் டிரைவரை பிடித்து விசாரித்ததில், அவர் விருதுநகரைச் சேர்ந்த ராமலிங்கம், 42 என்பது தெரிய வந்தது. அவர் டீசல் திருடியதை ஒப்புக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை