உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாத உணவுப்பொருட்கள் பறிமுதல்

தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாத உணவுப்பொருட்கள் பறிமுதல்

திருப்பூர்:தாராபுரத்தில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஆய்வில், காலாவதி உணவு பொருட்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய மூன்று கடைகள் சிக்கின; மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிரஞ்சீவி, ரகுநாதன், பாலமுருகன், ரமேஷ் குழுவினர், தாராபுரம் பகுதி பேக்கரி, உணவகங்களில் நேற்றுமுன்தினம் ஆய்வு நடத்தினர்.மொத்தம் 19 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தயாரிப்பு, காலாவதி தேதி விவரங்கள் இல்லாத 86.5 கிலோ உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 2.5 கிலோ காலாவதியான பொருட்கள், 1.5 லிட்டர் குளிர்பானம், 300 கிராம் செயற்கை நிறமூட்டி ஆகியன கைப்பற்றி, அழிக்கப்பட்டது. முழு விவரங்கள் இல்லாத உணவுப்பொருட்களை தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த கடைகள், காலாவதியான பொருட்களை விற்பனைக்குவைத்திருந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன் படுத்திய இரண்டு கடைகளுக்கு, தலா 2 ஆயிரம் ரூபாய்; சுகாதாரமற்ற முறையில் இருந்த ஒரு கடைக்கு ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை