உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மூத்தோர் தடகளத்தில் பதக்க வேட்டை

 மூத்தோர் தடகளத்தில் பதக்க வேட்டை

திருப்பூர்: நம் நாடு தடகள சங்கம் சார்பில், மாநில அளவிலான, 43வது மூத்தோர் தடகள போட்டி, காரைக்குடியில் நடந்தது. திருப்பூரிலிருந்து தடகள வீரர், வீராங்கனையர், 135 பேர் பங்கேற்றனர். திருப்பூர் வீரர்கள், 15 தங்கம், 30 வெள்ளி, 21 வெண்கலம் என, மொத்தம் 66 பதக்கங்கள் வென்றுள்ளனர். ஆண்கள் பிரிவில், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல் ஆகிய இரண்டு போட்டிகளில் மனோஜ், 5 கி.மீ. நடை, 200 மீ. தடை ஓட்டத்தில் செல்லமுத்து தங்கப்பதக்கம் வென்றனர். பெண்கள் பிரிவில், சங்கிலி குண்டு எறிதலில் ஜோதி, 200 மீட்டர் ஓட்டத்தில் அருள்செல்வி, 5 கி.மீ., நடையில் ஷோபனா, குண்டு எறிதலில் ஷாலினி, 5 கி.மீ., நடை, 1,500 மீ., - 5,000 மீ., ஓட்டம் ஆகிய மூன்று போட்டிகளில் சந்தனமாரி, குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய மூன்று போட்டிகளில் கண்ணம்மாள் தங்கப்பதக்கம், ஈட்டி எறிதலில் கார்த்திக் பிரியா தங்கம் வென்று சாதித்துள்ளனர். இவர்களுக்கு பாராட்டு விழா, நஞ்சப்பா பள்ளியில் நடந்தது. மூத்தோர் தடகள சங்கம் மாவட்ட தலைவர் செல்லமுத்து, செயலாளர் சுப்பிரமணியம், மாநில துணை தலைவர் விஸ்வநாதன், நஞ்சப்பா பள்ளி தலைமை ஆசிரியர் கர்னல் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ