உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடுரோட்டில் லாரி பழுது

நடுரோட்டில் லாரி பழுது

நேற்று மதியம், கோவை -- திருச்சி நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றது. டிரைவர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், லாரியை இயக்க முடியவில்லை. லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதாலும், பஸ் ஸ்டாண்ட் முன்புறம் என்பதாலும், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. லாரியின் இடது மற்றும் வலது புறம் என, வாகனங்கள் மாறி மாறி சென்றன. போக்குவரத்து போலீசார், லாரியை அப்புறப்படுத்த உதவினர். பத்து நிமிடத்துக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை