| ADDED : மார் 10, 2024 12:54 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் அரசு துறை வாரியான வளர்ச்சிப் பணிகள் நிலை குறித்து அமைச்சர் சாமிநாதன் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடந்த ஆய்வுக் கூட்டத்தில், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கலெக்டர் கிறிஸ்துராஜ், திட்ட அலுவலர் மலர்விழி முன்னிலை வகித்தனர். கோடை காலம் துவங்கிய நிலையில், குடிநீர் வினியோகப் பணிகள் எந்த வகையிலும் தடையின்றியும், தட்டுப் பாடின்றியும் வழங்கப்படுவதை குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.குழாய்கள் சேதம், பழுது, மோட்டார்கள் பழுது போன்ற தடைகள் எவ்வகையிலும் குடிநீர் வினியோகத்தை பாதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.