உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரூ.14 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள் மீட்பு

 ரூ.14 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள் மீட்பு

உடுமலை: திருப்பூர் மாவட்ட காவல்துறையினரால் மீட்கப்பட்ட, 74 மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட தொலைந்த மற்றும் காணாமல் போன மொபைல் போன்கள் குறித்த 74 மனுக்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில், காவல்துறை தொழில்நுட்ப பிரிவு விசாரணை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. விசாரணை அடிப்படையில், ரூ.14 லட்சம் மதிப்புள்ள, 74 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக், உரியவர்களிடம் மொபைல் போன்களை ஒப்படைத்தார். எஸ்.பி., கூறுகையில், ''மொபைல் போன் காணாமல் போனால், உடனடியாகபொதுமக்கள் CEIR (Central Equipment Identity Register) போர்ட்டலில் https://ceir.sancharsaathi.gov.inஎன்ற முகவரியில் அல்லது அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும். இது மொபைல் போனை விரைவாக கண்டறிய மிகுந்த உதவியாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை